

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த நீதிபதி சதாசிவம் இதனை தெரிவித்தார்.
இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு இது மாதியான சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடாது. நடந்த சம்பவத்திற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது, உயர் அதிகரி ஒருவருக்கு இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என ஒரு தனி நபராக தான் கருதுவதாக தெரிவித்தார்.
நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகார் குறித்த கேள்விக்கு ஓய்வுக்குப் பிறகு நீதிபதியும் ஒரு சாமான்ய நபரைப் போன்றவர் தான். எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.