

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 18 சதவீத இட ஒதுக்கீட் டில் இருந்து அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான கொள்கை முடிவு கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது.
உள் இடஒதுக்கீட்டின்படி மருத்து வம், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த அருந்ததியர் சமுதாய மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அன்றைய முதல் வர் கருணாநிதி தனது சொந்த நிதி யில் இருந்து ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். இது தவிர 2007-ல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.
இந்நிலையில், அதிமுக ஆட்சி யில் அருந்ததியினருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு முறையாக அமல் படுத்தப்படவில்லை. இந்த ஒதுக்கீட் டின்படி பணி நியமனங்கள் செய்யா மல் அருந்ததியர் சமுதாயத்தை அரசு வஞ்சித்துவிட்டது. இந்த அநீதியை எதிர்த்து ஆதித் தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமையும். அப்போது இதுபோன்ற உயிர் தியாகங்கள் இல்லாமலேயே அருந்ததியின சமுதாயத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்.