

காரில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத் திருந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பரான மாநில உளவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளரிடம் விசா ரணை நடந்துவருகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாலை திருக்குமரன் (41). ஆதம்பாக்கத்தை சேர்ந்த வர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் சூளைமேடு சங்கராபுரம் பகுதிக்குச் சென் றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே காரை நிறுத்திவிட்டு, அந்த குடியிருப் பில் வசிக்கும் ஆல்பர்ட் என்ப வரைப் பார்ப்பதற்காக சென் றார். அவர், மாநில உளவுப்பிரிவு போலீஸில் (எஸ்பிசிஐடி) உதவி ஆய்வாளராகப் பணியாற்று பவர்.
இதற்கிடையில், வழக்கறிஞர் சாலை திருக்குமரனின் செயல் பாடுகளில் சந்தேகம் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவுக்கு (ஐபி) தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐபி டிஎஸ்பி பிரதாப் தலைமை யிலான போலீஸார் சாலை திருக்குமரனின் காரை சோதனை செய்தனர்.
பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.2 கோடி மதிப்பில் கட்டுக்கட்டாக காருக்குள் வைக்கப்பட்டிருப் பதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து சூளைமேடு போலீஸாருக்கு தகவல் கொடுத் தனர். போலீஸார் விரைந்து வந்து, பழைய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றினர். வழக்கறிஞர் சாலை திருக்குமரன் கைது செய் யப்பட்டார். பணம் பதுக்கலில் அவரது நண்பரான உதவி ஆய்வாளர் ஆல்பர்ட்டுக்கும் தொடர்பு உண்டா என்று அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.