காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: ஆசிரியையை குத்திய இளைஞர் கைது

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: ஆசிரியையை குத்திய இளைஞர் கைது
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந் தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி(20). திரு நெல்வேலியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரி யையாக பணியாற்றி வருகிறார்.

நித்திரவிளை பூந்தோப்பு காலனியை சேர்ந்த மீன்பிடி தொழி லாளியான பிஜூ காஸ்ரோ (27), அனுகென்சியை ஒருதலையாக காதலித்துள்ளார். அனுகென்சிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன், நித்திரவிளை போலீஸில் அனுகென்சி புகார் செய்துள்ளார். பிஜூ காஸ் ரோவை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். வரும் 5-ம் தேதி அனுகென்சியின் திருமணம் நடைபெற உள்ளதால் பிஜூ காஸ்ரோ ஆத்திரமடைந்தார். நேற்று முன்தினம் புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து அனு கென்சி வந்தபோது, அவரை பிஜூ காஸ்ரோ கத்தியால் குத்தினார். அப்பகுதி மக்கள், பிஜூ காஸ்ரோவை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய் தனர். படுகாயம் அடைந்த அனு கென்சி, கேரள மாநிலம், நெய் யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in