

வெள்ள நிவாரண கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் பெயரைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் குரலில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஊரப்பாக் கத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
ஊரப்பாக்கத்தில் யமுனா நகர், மகாவீர் நகர், பிரியா நகர் உள்ளிட்ட 12 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இங்கு வெள்ள நீர் தரை தளத்தை மூழ்கடித்தது. இங்கு நடத்தப்பட்ட வெள்ள நிவாரண கணக்கெடுப்பில், பல குடும்பங் கள் விடுபட்டுள்ளன. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, கடந்த மாதம் 27-ம் தேதியே கணக்கெடுப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துவிட் டார். எனவே, விடுபட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்ற புகார் எழுந்துள்ளது. வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறும்போது, “எங்கள் குடியிருப்பில் 64 வீடுகள் உள்ளன. வெள்ள நிவாரணத் துக்கு கணக்கெடுக்க வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த அலுவலர் அப்போது அங்கு இருந்த 25 பேரிடம் மட்டும் விவரங்களை பெற்றுச் சென்றுவிட்டார். மீண்டும் வருவதாக கூறியவர் வரவே இல்லை. இது போல் அப்பகுதியில் உள்ள மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பல வீடுகள் விடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தாசில்தாரிடம் மனு அளித்துள்ளோம். விடுபட்ட வர்களுக்காக மீண்டும் கணக் கெடுப்பு நடத்தவேண்டும்” என் றார்.
இது தொடர்பாக, மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறும் போது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம் தவிர மற்ற பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பாத பகுதிகளில் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை. முடிந்த பகுதிகளில் விடுபட்டவர்கள் பலர், தொடர்ந்து புகார் தெரிவிக் கின்றனர். இவர்கள், அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். அதை தாசில்தார்கள் பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி யுள்ளார்.
சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர் அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பார். விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் சரிதானா என்று அறிந்து அவர் அறிக்கை அளிப்பார். கள ஆய்வுக்குப் பின் அவர்கள் பற்றிய விவரம் கணக்கெடுப்பில் சேர்க்கப்படும்” என்றனர்.