

டிசம்பர் 15-ஆம் தேதி கருணாநிதி தலைமையில், திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தலைமைக் கழகத் தணிக்கைக் குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியுடனான 9 ஆண்டு கால கூட்டணியை திமுக சில மாதங்களுக்கு முன்னர் முறித்துக் கொண்டது. இருப்பினும் ராஜ்ய சபா தேர்தலில் கனிமொழிக்காக காங்கிரஸ்-திமுக இடையே நட்பு மலர்ந்தது.
இந்த சம்பவங்களுக்குப் பின்னர் இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதால், தேர்தல் கூட்டணி குறித்த திமுக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.