புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரம் குப்பைகளை கொட்டுவதாக புகார்: அத்துமீறும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி - ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு

புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரம் குப்பைகளை கொட்டுவதாக புகார்: அத்துமீறும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி - ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு
Updated on
1 min read

புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் கரை யோரம் நாரவாரிக்குப்பம் பேரூ ராட்சி நிர்வாகமே குப்பைகளைக் கொட்டி வருவதாக மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதாலும், ஏரி பகுதிகள் தூர்வாரப்படாததாலும், கடந்த 2015-ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் கிடைத்த நீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாமல் போனது. மேலும், ஏரியின் கரையோரப் பகுதிகள் சமூக விரோதிகள் மற்றும் பொதுமக்களால் மாசுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் கரையோரம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நாள்தோறும் குப்பைகளைக் கொட்டி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று புகார் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ள தாவது: புழல் ஏரியை மாசு படுத்தும் வகையில் செங்குன்றம் பகுதியில், புழல் ஏரியின் ஒரு பகுதி மற்றும் ஜி.என்.டி. சாலையை ஒட்டி செல்லும் புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் கரையோரம் காலி இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி திடீர் திடீரென குப்பைகளைக் கொட்டி வந்தது. நாளடைவில், புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் கரையோரம் குப்பை களைக் கொட்டுவதை நாள் தோறும் வழக்கமாக கொண் டுள்ளது.

இதனால் மலைபோல் குவிந்து வரும் குப்பையின் ஒரு பகுதியை பகல் நேரத்தில் எரிந்து வருகிறது. ஆகவே, நிலத்தடி நீர் மட்டுமல்லாமல், காற்றும் மாசுப்பட்டு வருகிறது. நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் இச்செயலால், செங்குன்றம் பகுதி மக்கள், புழல் ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், பஸ் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகின் றனர். எனவே, குப்பைகளைக் கொட்டாமல் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in