

தூத்துக்குடியில் மாவட்ட அளவி லான குத்துச்சண்டை போட்டியின் போது, பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக் குடி தருவை விளையாட்டு மைதானத் தில் நேற்று காலை தொடங்கின.
இதில் 14 வயதுக்கு உட்பட் டோருக்கான குத்துச் சண்டை போட்டி யில் தூத்துக்குடி கோரம்பள்ளம், மாதவன் நகரைச் சேர்ந்த கென்னடி மகள் மாரீஸ்வரி(14) கலந்துகொண் டார். இவர் சோரீஸ்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பங்கேற்ற போட்டி நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.
முதல் இரண்டு சுற்று ஆட்டங்கள் முடிந்து இடைவேளையின்போது, மாரீஸ்வரி திடீரென மயங்கினார். அங்கிருந்த உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். இருப்பினும் அவர் மயக்கம் தெளியாததைத் தொடர்ந்து தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள் ளனர்.
அங்கு முதலுதவி அளித்த மருத் துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களில் மாரீஸ்வரி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம், மாவட்ட விளையாட்டு அலுவலர் எல்.தீர்த்தோஸ் ஆகி யோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மாணவி மாரீஸ்வரின் தந்தை கென்னடி, தாய் ஈஸ்வரி ஆகி யோர் கூலித் தொழிலாளர்கள். மாரீஸ்வரிக்கு மாரிச்செல்வன்(20) என்ற அண்ணனும், மாரி வெங்க டேஸ்வரி(11), உஷா(8) என்ற இரு தங்கைகளும் உள்ளனர். மாரிச் செல்வன் பிபிஏ முதலாமாண்டும், மாரி வெங்கடேஸ்வரி 6-ம் வகுப்பும், உஷா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
அவரது அண்ணன் மாரிச்செல் வன் கூறும்போது, “சிறு வயதில் இருந்தே மாரீஸ்வரிக்கு விளையாட் டில் அதிக ஆர்வம் உண்டு. கடந்த 10 நாட்களாக தினமும் பயிற்சி பெற்று வந்தார்.
முழுமையாக பயிற்சி பெறாத தால் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்றுதான் கூறினோம். ஆனால், போட்டி எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டியில் பங்கேற்றார்.
முதல் 2 சுற்றுகள் நன்றாகவே விளையாடி முன்னிலையில்தான் இருந்தார். இடைவேளையின்போது திடீரென மயங்கி விழுந்தார். தனி யார் மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்குப் பிறகு, அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார்” என்று கூறி கதறி அழுதார்.
மாவட்ட விளையாட்டு அலுவ லர் எல்.தீர்த்தோஸ் கூறும்போது, “விளையாட்டு மைதானத்தில் முதலுதவி பெட்டி மற்றும் முதலு தவி உபகரணங்கள் இருக்கின்றன. மாணவி மயங்கியதும் உறவினர் களே மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர். மைதானத்தில் மருத் துவர் வசதி கிடையாது. நடந்த சம்பவம் தொடர்பாக அரசுக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
மாணவி தற்போதுதான் முதல் முறையாக குத்துச்சண்டை போட்டி யில் பங்கேற்கிறார். இதற்காக சில நாட்கள்தான் பயிற்சி பெற்றுள்ளார். ஆர்வம் காரணமாகவே போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார். அதுபோல பெரும்பாலான மாணவ, மாணவி யரும் புதியவர்களே. மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தாய் கண் முன்னே
மாணவி மாரீஸ்வரி முதல்முறை யாக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்பதால் அவரது தாய் ஈஸ்வரி, சகோதரர் மாரிச்செல்வன், பயிற்சியாளர் சுப்புராஜ் ஆகியோர் போட்டியைக் காண வந்திருந்தனர். அவர்கள் கண் முன்னே மாரீஸ்வரி மயங்கி விழுந்தார்.
அவர் இறந்ததை அறிந்ததும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போர் மனதைக் கரைய வைத்தது. இச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் இல்லை
இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பு தலைவர் ஆ.சங்கர் கூறும் போது, “குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் நடை பெறும்போது மருத்துவர், ஆம்பு லன்ஸ் போன்ற வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருந்தால் இச்சம்பவத்தை தடுத்திருக்கலாம். இனிமேலாவது, முக்கிய விளையாட்டுகள் நடை பெறும்போது மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ் வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்றார்