

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லினை கொங்குநாடு மக்கள் தேசி யக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ் வரன் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டி யிட ஈஸ்வரன் விருப்பம் தெரி வித்தார்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பெஸ்ட் ராமசாமி, ஈஸ் வரன் ஆகியோர் தலைமையிலான கொங்குநாடு மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி உடைந்தது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்ற தனிக் கட்சியை தொடங்கிய ஈஸ்வரன், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வுக்கு நெருக்கடியை ஏற்படுத்த இக்கட்சியுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலினும் விரும்புவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கடந்த திங் கள்கிழமை ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.