கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா உத்தரவு

கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா உத்தரவு
Updated on
1 min read

கோதையாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக ராதாபுரம் கால்வாயில் 21.9.2016 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in