38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி: செந்தில் பாலாஜி மீது புதிய புகார் - வழக்கு பதியக் கோரி மனு தாக்கல்

38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி: செந்தில் பாலாஜி மீது புதிய புகார் - வழக்கு பதியக் கோரி மனு தாக்கல்
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 2 மேலாண்மை இயக்குநர்கள் மீது வழக்கு பதியக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிகிறேன். 2014-ல் அப் போதைய காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பாபு, அரசு போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர், அலுவ லக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு புதி தாக ஆட்கள் தேர்வு செய்யப் படுவதாகவும், அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பணம் வழங்கினால் வேலை கிடைக்கும் என என்னி டம் தெரிவித்தார். இது தொடர்பாக அரசு வேலை தேடிக்கொண்டு இருக் கும் எனது நண்பர்களிடம் தெரிவித்த துடன், அவர்களை மேலாண்மை இயக்குநர் பாபுவிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.

அவர்களிடம் என்னுடைய வங்கிக் கணக்கை வழங்கிய பாபு, அந்த கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த கூறியுள் ளார். அவரது பேச்சை நம்பி எனது வங்கிக் கணக்கில் 38 பேர் அவ்வப்போது பணம் செலுத்தினர். அந்தப் பணத்தை எடுத்து பாபுவிடம் வழங்கினேன். பாபு ஓய்வு பெறும் வரை அவரிடம் ரூ.60 லட்சம் வழங்கினேன். அவர் ஓய்வுக்கு பிறகு மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்ற ரங்கராஜ் என்னிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பாபு சார்பில் பணி நியமனம் பெற்றுத் தருவது எனது பொறுப்பு என்றார். ஆனால் அவர் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை.

தமிழகத்தில் 2011 முதல் 2016 வரை போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி உடன் பாபு, ரங்கராஜ் ஆகியோரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இத னால் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி சிவகங்கை போலீஸாரிடம் 25.7.2016-ல் புகார் அளித்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லை. எனது புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in