ராமேசுவரத்தில் பறக்கும் ஆளில்லாத விமானங்கள்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ராமேசுவரத்தில் பறக்கும் ஆளில்லாத விமானங்கள்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Updated on
1 min read

ராமேசுவரம் கடல் பகுதியில் ஆளில்லாத விமானங்களை சுற்றுலாப் பயணிகள் பறக்க விடுவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ராமேசு வரம் பகுதிக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றிலும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அந்நிய ஊடுரு வலை கண்காணிக்கும் வகையில் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 300 அடி உயரத்தில் ராடார் மற்றும் வயர்லெஸ் கருவி நிறுவப்பட்ட தகவல் தொடர்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச முக்கியத்து வம் வாய்ந்த இடமான ராமேசுவ ரத்தில் ஆளில்லாத விமானங்களை பறக்க விடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமேசுவரத்துக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஆளில்லாத விமானங்களை பறக்க விட்டு, அவற்றின் மூலம் புகைப்படம், வீடியோ எடுக்கின்றனர். பின்னர் அவற்றை ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனுமதி பெற வேண்டும்

இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “ராமேசுவரம் தீவில் இந்திய கடற்படையின் ரோந்து ஹெலிகாப் டர்கள் மற்றும் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும்போது, சுற்றுலாப் பயணிகளின் ஆளில் லாத விமானங்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக வீடுகளின் அருகில் பறக்க விடப்படும் விளையாட்டு விமானங்களுக்கு அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால் 10 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக திறந்த வெளிகளில் விமானத்தை பறக்க விடுவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

குறிப்பாக ட்ரோன் எனப்படும் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லாத விமானங்களை வைத்திருப்பவர்கள், அது தொடர் பாக கால்துறையினரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிரச்சி னையை ஏற்படுத்தும் வகையில் ஆளில்லாத விமானங்களை பறக்க விடுவோர் மீது, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித் ததாக வழக்கு பதிவு செய்யப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in