

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நிறுவனமான தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரு கிறது. முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரத மரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.
புதிதாக தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆதரவு மிகவும் அவசியம். அந்த வகையில், குறு மற்றும் சிறு தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் நிதி மேலாண்மை வரிகள், வாடிக்கையாளர்களை கையாளுதல், வருவாயைப் பெருக் குதல் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள ஆலோசனைகள் தேவைப் படும். இதற்காக, தொழில் முனை வோர் மேம்பாட்டு நிறுவனமும், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளையும் இணைந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆலோசனை முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த முகாமில், நிதி, வங்கி மற்றும் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில்முனைவோர் நூலகம் மற்றும் தொழில் வாய்ப்பு கள் வழிகாட்டி மையம் ஆகியவற்றி லுள்ள தொழில் திட்ட அறிக்கை களையும் பயன்படுத்தி திட்ட அறிக் கைகளை தயாரிக்கலாம்.
மார்ச் மாதத்துக்கான தொழில் வழிகாட்டி ஆலோசனை முகாம் வருகிற 2, 9, 16, 23, மற்றும் 30-ம் தேதிகளில் சென்னை ஈக்காட்டுத் தாங்கல் பார்த்தசாரதி கோயில் தெரு வில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய அந்த நிறுவனத்தின் துணை இயக்குநரை 044-22252081 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.