

சென்னை மற்றும் புறநகர் பகுதி களிடையே தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் கள் இயக்கப்படுகின்றன. இவற் றில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மின்சார ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் ரோந்துகளை அதிகரிப் பது உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே போலீஸில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுவரையில், தற்போதுள்ள ரயில்வே போலீஸாருக்கு கூடுதல் நேரம் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றங்களைத் தடுக்க உள்ளூர் போலீஸாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ரயில்வே போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் நிலையங் களில் ரயில்வே போலீஸாருடன் ஊர்க்காவல் படையினரையும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.
இதுபற்றி ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. ஏற்கெனவே 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டு மென பரிந்துரை செய்யப்பட் டது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். மின்சார ரயில்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்களை அமைத்துள்ளோம்” என்றனர்.