Published : 28 Sep 2016 09:05 AM
Last Updated : 28 Sep 2016 09:05 AM

சிலை திறப்பு வழக்கில் திருமாவளவன் விடுவிப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி மற்றும் நெடுஞ்சேரி ஆகிய கிராமங்களில் கடந்த 16.7.2011 அன்று, அம்பேத்கர் சிலைகளை அனுமதியின்றி திறந்து மாலை அணிவிக்கப்பட்டதாக ஸ்ரீமுஷ் ணம் போலீஸார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் நீதி மன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதற்காக விருத்தாசலம் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகினர். திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் விடு தலை செய்வதாக நீதிபதி கூறி னார்.

பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில் கள்ளிப்பாடி, நெடுஞ்சேரியில் நான் சென்று மாலை அணிவித்தது சட்ட விரோதம் என வழக்கு தொடரப் பட்டது. நாங்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வந்துள்ளது. நீதித் துறைக்கு நன்றியை தெரிவித் துக்கொள்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் சேர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும். வருகிற 1, 2, 3-ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x