

பிஏபி திட்ட நீர்தேக்கங்களின் நீர் அளவு குறித்து கேரள சோலை யாறு அணையில், இரு மாநில பொதுப்பணித் துறை அதிகாரி களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பிஏபி திட்டத்தின் கீழ் ஆழியாறு அணை மற்றும் சோலையாறு அணையில் உள்ள நீரை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்கள் ஒப்பந்த அடிப்படையில் பங்கிட்டு வருகின்றன. இதில், தமிழக, சோலையாறு அணையில் இருந்து, கேரள சோலையாறு அணைக்கு 12.30 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1-ம் தேதி மற்றும் செப்.1-ம் தேதி நீர்தேக்கங்களின் நீர் அளவு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் கேரள சோலையாறு அணைப் பகுதி யில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தில், தமிழக பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோவன், செயற்பொறி யாளர்கள் மதியழகன், லோக நாதன், உதவி செயற்பொறியாளர் லீலா ஆகியோரும், கேரள அரசின் நீர் அளவைப் பிரிவு இணை இயக்குநர் சுதிர் மற்றும் பொறி யாளர்கள் பங்கேற்றனர்.
அணையில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் வழங்கியதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த கேரள அதிகாரிகள், சோலையாறு அணையின் கொள்ளளவான 5.42 டிஎம்சியில் தற்போது 4.347 டிஎம்சி தண்ணீர் உள்ளது. செப்.1-ம் தேதி கூட்டம் நடைபெறும்போது, கேரள சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காணப்படும். ஆனால், தற்போது நீர் குறைவாக உள்ளதற்கான காரணத்தை கேட்டனர். தமிழக, சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் மழைப்பொழிவு குறைந் துள்ளதால், கேரள சோலையாறு அணைக்கு திறக்கும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. அணைப் பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும்போது நீர் வழங்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றனர். இதனை கேரள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.