

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்போம் என்பதை விரைவில் முடிவு செய் வோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்த அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என இதுவரை முடிவு செய்யவில்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை எங்கு அமைய வேண்டு மென மறைந்த முதல்வர் ஜெய லலிதா வலியுறுத்தினாரோ, அந்த இடத்திலேயே அமைக்க நாங் களும் மத்திய அரசை வலி யுறுத்தியுள்ளோம்.
தமிழக அரசின் நிலை
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை செய்துள்ளது தொடர் பாக எந்த அறிக்கையும் வரவில்லை. அறிக்கை வந்ததும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது.
123 எம்எல்ஏ-க்களுடன் தமிழக அரசு நிலையான அரசாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசுதான் மைனாரிட்டி அரசாக இருந்தது. அதனால், இந்த அரசு மீது குறைகூறுவதற்கு ஸ்டாலி னுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றார்.