

நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிந்தகரையில் உள்ள சுனாமி காலனியில் இந்த விபத்து இன்று இரவு நிகழ்ந்தது. சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் கூத்தங்குழியைச் சேர்ந்த யாகப்பன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாட்டு குண்டுவெடிப்பின்போது 2 வீடுகள் தரைமட்டம் ஆனதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சுனாமி காலனியில் மின்சாரம் இல்லாததால் மீட்புப் பணிகள் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.