

பண்டிகைக் காலத்தையொட்டி ஆந்திரா வங்கி பல்வேறு கடன் திட்டங்களுக்கு வட்டி குறைப்பு, செயலாக்க கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இது தொடர்பாக ஆந்திரா வங்கி மண்டல மேலாளர் கே.வி.சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருட்கள் கடன் ஆகியவற்றுக்கு செயலாக்க கட்டணம் (பிராசஸிங் பீஸ்) முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 10.25 சதவீதமாக குறைக்கப்படும். கார் கடன் வட்டி 11.25 சதவீதமாக குறைக்கப்படும்.
கடன் கேட்டு விண்ணப்பித்தால் விரைவாக அனுமதி வழங்கப்படும் என்று வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.