

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஜல்லிக்கட்டு காளையின் பிரம்மாண்ட படத்தோடு மாணவர்கள் குடியரசு தின விழாவைக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 3000 பேர், பள்ளி மைதானத்தில் இந்திய தேசியக்கொடியின் வடிவத்தில் அமர்ந்திருந்தனர். கொடியின் பின்புறத்தில் 35 அடி நீளம், 24 அடி உயரம் கொண்ட காளையின் படம் வைக்கப்பட்டிருந்தது. அதில் 'இந்தியனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்' என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது.
இதைத்தவிர மாணவர்கள், தங்கள் முகத்தில் தேசியக் கொடியை வரைந்து, 'நான் இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற வாசகத்தையும் எழுதியிருந்தனர்.
அவை குறித்த புகைப்படத் தொகுப்பு கீழே.