Published : 23 Sep 2016 08:40 PM
Last Updated : 23 Sep 2016 08:40 PM

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளார் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் பூங்கொத்துக்களை அனுப்பி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய செய்தியில், 'விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய செய்தியில், 'காய்ச்சல் காரணமாக தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.மக்களின் பிரார்த்தனை மற்றும் கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தாங்கள் செய்யும் தொண்டு தொடர நல்ல ஆயுளுடன் மீண்டு வர வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்):

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுமை யாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் விரைவில் குணமடைந்து, பணிகளை மீண்டும் தொடர இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் உடல் நலம் குன்றியுள்ள முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று அரசு, அரசியல் பணிகளை தொடர விரும்புகிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்):

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளது பற்றி கேள்விப் பட்டேன். அவர் பூரண குணத் துடன் வீடு திரும்பி தனது பணிகளை கவனிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். பூரண உடல் நலத்துடன் அவர் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார் என்ற தகவ லால் மிகுந்த கவலை ஏற்பட் டுள்ளது. முதலமைச்சர் ஜெய லலிதா பூரண உடல் நலம் பெற இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

முதலமைச்சர் ஜெயலலிதா விரை வாக பரிபூரண நலம் பெற்று வழக்கம் போல் தனது பொதுப்பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கி.வீரமணி (திக தலைவர்):

உடல்நலக் குறைவால் அப் போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. முதலமைச்சர் உடல்நலம் தேறி, விரைவில், வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

“தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த் தனை செய்கிறேன். நம் அனை வரது வழிபாடும் வேண்டுதலும் அவரை உறுதியாக நலம் பெறச் செய்யும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி:

“தமிழக முதல்வர் பரிபூரண குணம் அடையவும், நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித் துள்ளார்.

இதேபோல், முதல்வர் நலம் பெற வேண்டி ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் உள் ளிட்டோரும் வாழ்த்து தெரி வித்துள்ளனர். மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைவர்கள் அறிக்கையில் வாழ்த்து கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x