Published : 07 Apr 2017 08:32 AM
Last Updated : 07 Apr 2017 08:32 AM

வீணை பாலசந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு ‘அந்த நாள்’ நாடகம் 2-வது ஆண்டாக அரங்கேற்றம்: சென்னையில் 13-ம் தேதி நடக்கிறது

இயக்குநர் வீணை எஸ்.பால சந்தரின் 27-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி அவர் இயக்கிய ‘அந்த நாள்’ நாடகம் சென்னையில் 2-வது ஆண்டாக அரங்கேறுகிறது. இந்த நாடக நிகழ்ச்சி தி.நகர் கிருஷ்ணகான சபாவில் நடைபெற உள்ளது.

தமிழ்ச் சினிமாவில் திகில் படங் களின் பிதாமகன் என போற்றப்படு பவர் மறைந்த இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். ‘அந்த நாள்’, ‘அவன் அமரன்’, ‘பொம்மை’ உட்பட பல படங்களை அவர் இயக்கியுள்ளார். அவரது படங்கள் அந்த காலத்தி லேயே ஹாலிவுட் தரத்துக்கு நிகராக பேசப்பட்டன. அவர் வீணை வித்வான் என அறியப்பட்டாலும் 40-க்கும் மேற்பட்ட இசைக்கருவி களை வாசிக்க தெரிந்தவர். யாரு டைய உதவியும் இல்லாமலேயே சொந்த முயற்சியில் வீணையை கற்று அதில் ஜாம்பவான் ஆனவர்.

வீணை பாலசந்தர் 1990-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் வீணை வித்வான் எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், வீணை பாலசந்தரின் 27-வது நினைவு தினம் வரும் 13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் அவர் இயக்கி அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட திகில் படமான “அந்த நாள்” திரைப்படத்தின் நாடக வடிவம் 2-வது ஆண்டாக அரங்கேறுகிறது.

எஸ்பி கிரியேஷன்ஸ் இதை அரங் கேற்றம் செய்கிறது. இந்த நாடக நிகழ்ச்சி தி.நகர் கிருஷ்ணகான சபாவில் வருகிற 13-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. நாடகத்தை பார்க்க அனுமதி இலவசம்.

இந்த நாடக நிகழ்ச்சியை வீணை வித்வான் எஸ்.பாலசந்தர் அறக்கட்டளையுடன் இணைந்து  கிருஷ்ணா சுவீட்ஸ், கிருஷ்ண கான சபா, எஸ்என்ஜெ பிரிட்டிஷ் எம்பயர் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x