பொறியியல் மாணவரை தாக்கிய விவகாரம்: பங்காரு அடிகளார் மகன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு

பொறியியல் மாணவரை தாக்கிய விவகாரம்: பங்காரு அடிகளார் மகன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு
Updated on
2 min read

மேல்மருவத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பங்காரு அடிகளார் மகன் செந்தில்குமார் உட்பட 10 பேர் மீது மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி, சிவசுப்பிர மணியபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் விஜய்(22). மேல்மருவத்தூர் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நிலவும் அவலங்கள் குறித்து வெளியிலும், சமூக வலை தளங்களிலும் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் இவரை தாக்கியதாகவும் இதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும் மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளான விஜய் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அங்கு வந்த உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய தாக கூறப்படுகிறது. இந்த விவ காரம் விஸ்வரூபம் எடுத்து, பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் மருத்துவர்களின் போராட்டத்தால் தாங்கள் பாதிக் கப்பட்டதாக பொதுமக்களும், தங்களைப் பயிற்சி மருத்துவர்கள் சிலர் தாக்கியதாக பத்திரிகை யாளர்களும் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் விஜய்யின் உறவினர்களும் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு சமரசம் செய்ய வந்த போலீஸ் அதிகாரி களிடம் விஜய் தாக்கப்பட்டது குறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் புகார் மனு அளித்தார். இந்த மனுவை அவர்கள் பரிந்துரை செய்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்த னர்.

இப்புகார் மனுவில் பஞ்சவர்ணம் தன் மகனை பங்காரு அடிகளார் மகன் செந்தில்குமார், அவருடன் இருக்கும் சக்தி கண்ணன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய தாக கூறியுள்ளார். மேலும் விஜயை வகுப்பறை வாரியாக அழைத்துச் சென்று யாராவது நிர்வாகத்தை பற்றி வெளியில் தவறாக பேசினால் இவனுக்கு ஏற்படும் நிலைதான் ஏற்படும் என்று தாக்கியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கூட்டம் கூடுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுதல் உட்பட 6 பிரிவுகளில் (147, 342, 294(வ), 323, 324, 506(2)) மேல்மருவத்தூர் போலீஸார் செந்தில்குமார் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பங்காரு அடிகளார் மகன் மீது மேல்மருவத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷிடம் கேட்டபோது விஜய் தரப்பில் நேற்று வந்த புகாரின் அடிப்படையில் பங்காரு அடிகளார் மகன் செந்தில்குமார் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

கருத்து கூற மறுப்பு

இது தொடர்பாக பதில் பெற பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமாரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் வெளியூர் சென்றுள்ளதாக கல்லூரி அலுவல கத்தில் இருப்பவர்கள் தெரிவித்த னர். தொடர்ந்து மேல்மருவத்தூர் கோயிலின் மக்கள் தொடர்பு அலுவலர் முருகானந்தத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இது தொடர்பாக செந்தில்குமாரிடம் தற்போது ஏதும் கேட்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in