சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி யோகா

சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி யோகா
Updated on
1 min read

இன்று உலக யோகா தினம்

உலக யோகா தினம் இன்று கொண் டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நேற்று மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

உலக யோகா தினம் குறித்து தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், இந்திய மருத்துவம் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி) மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரியுமான டாக்டர் எம்.பிச்சையாகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உடலுக்கும், உள்ளத்துக்கும் அளிக் கப்படும் பயிற்சியே யோகாசனம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மருத்துவ மான சித்த மருத்துவம் மிகவும் தொன்மையான முறையாகும். 18 சித்தர் களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத் தின் ஒரு பகுதியே யோகா. திருமூலர் சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகியோர் யோகா வுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சித்த மருத்துவத்தில் யோகம், ஞானம், வைத்தியம், மூப்பு என்று பல பிரிவுகள் அடங்கியுள்ளன. யோகம் ஆன்மாவை நன்னிலைப்படுத்துவதற்கும், ஆன்மா அடங்கிய உடலை நோய் வராமல் தடுப்பதற்கும், நோயுற்ற காலத்தில் நோய் தீர்க்கும் மருத்துவ முறையாகவும் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் தம் அனுபவங்களால் கண்டறிந்து கூறிய யோக முறைகள் இன்று அறிஞர்கள். விஞ்ஞானிகள், மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள் ளன. நம்முடைய யோக சாஸ்திரம் மனோதத்துவத்தையும், தத்துவ சாஸ்தி ரத்தையும் கடந்தது. மக்கள் யோகா பயிற்சிகளை முறையாக செய்துவருவ தன் மூலம் மனித வாழ்வு பொலிவுறும். யோகாசன பயிற்சி முறைகள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையது. பெண் கள் யோகாசனத்தால் நல்ல பயன் பெறமுடியும். வாழ்வியல் மாறுபாடு களினால் உண்டாகும் நோய்கள் வரா மல் இருக்க மக்கள் அன்றாடம் யோகா சன பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

திருமூலரின் பார்வை

சித்தர்கள் யோகம், ஞானம், வாதம், வைத்தியம் என்ற நான்கிலும் சித்தி பெற்றவர்கள். யோகம் என்பது சேர்த்தல் அல்லது ஒன்றுவித்தல் என பொருள் படும். இது வெளியிலிருந்து வருவது அல்ல, உள்ளுக்குள்ளேயே மலர்வது. ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது மனம். மனதை அடக்கி ஆள யோகம் துணைபுரிகிறது. சித்திக்காக யோகமும் முக்திக்காக வேதாந்தமும் கற்றனர் நம் சித்தர்கள். ஆசனம், பிராணாயாமம், தியானம் இவைகளைச் செய்து ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் மனதை சீர்படுத்தி சக்தி மற்றும் இளமை ஆகியவற்றை அதிகப்படுத்தி நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியம் பெற முடி யும் என்று திருமூலர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டாக்டர் எம்.பிச்சையா குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in