

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்கப்போவதாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
இக்கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. தலைவர் பி.பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாவட்ட அளவில் தகுதியும் திறமையும் உள்ள வழக்கறிஞர்களை கண்டறிந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இக்கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.
வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி சென்னையில் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க உள்ளோம். அப்போது இது தொடர்பாக அவரிடம் வலியுறுத்த உள் ளோம். இக்கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மத்திய, மாநில அரசு களுக்கும் அனுப்ப வேண்டும் என தெரிவிப்போம்.
மாவட்ட அளவில் பணிபுரியும் சில நீதிபதிகள் வழக்கறிஞர்களிடம் மரியாதைக்குறைவாக நடக்கின் றனர். எனவே எந்த நீதிபதி செயல் பாட்டில் அதிருப்தி ஏற்பட்டாலும் அந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதுபற்றி தீர்மானம் நிறைவேற்றி உயர்நீதிமன்றத்துக்கு உடனே அனுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 31-ம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.