கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகள்: மின் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? - தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதை பணியில் மெத்தனம்

கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகள்: மின் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? - தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதை பணியில் மெத்தனம்
Updated on
2 min read

மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உலகிலேயே மின்சார ரயில் களால் உயிரிழப்பு என்பது இந்தி யாவில்தான் அதிகம் என தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் பேர் இறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது.

பயணிகளின் கவனக்குறைவே உயிரிழப்புக்கு காரணமாக கூறப்பட்டாலும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப போதிய அளவில் மின்சார ரயில்களின் சேவை இல்லாததும் மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசலைச் சமாளிக்க மின்சார ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும். 14 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடைமேடைகளை விஸ்தரிக்காமல் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

இது தொடர்பாக டிஆர்இயு உதவித் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:

சென்னை, புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். புறநகர் பகுதிகளில் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பெரும்பாலோர் மின்சார ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால், மின்சார ரயில்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

ஆனால், அதற்கேற்ப ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இருப்பதுபோல சென்னையிலும் 14 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும். இதற்கான நடைமேடை வசதிகளை ரயில் நிலையங்களில் ஏற்படுத்த வேண் டும். மேலும், மெட்ரோ ரயில் களில் இருப்பதுபோல, இனிமேல் தயாரிக்கப்படும் மின்சார ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவு வசதி அமைக்க வேண்டும்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.256 கோடி மதிப்பில் 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இதில் மண் பரிசோதனை மட்டுமே முடிந்துள்ளது. இந்த 3-வது பாதை பணிகளை விரைவாக முடித்தால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையை அதிகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் பெட்டிகள்

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் பாதைகள் போதிய அளவில் இல்லாதது, நடைமேடைகளில் விரிவாக்கம் செய்யாதது போன்ற காரணங்களால் மின்சார ரயில் சேவையை அதிகரிப்பதும் கூடுதல் பெட்டிகளை இணைப்பதும் தற்போது முடியாத விஷய மாகும். அடுத்த சில ஆண்டு களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும்போது கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது பாதை அமைக்கும் பணிகள் முடிந்தால் மின்சார ரயில் சேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in