

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறுவது நிர்வாகத்திறனற்ற நிலையையே காட்டுகிறது என்று ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, போக்குவரத்து கழகங்கள் லாபத்துடன் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.