நிறைவேறுமா அப்துல் கலாமின் கனவு? - இன்று 83-வது பிறந்த நாள்

நிறைவேறுமா அப்துல் கலாமின் கனவு? - இன்று 83-வது பிறந்த நாள்
Updated on
2 min read

கனவுகள் மலரட்டும்! கனவுகள் எண்ணங்களாக வடிவம் பெறு கின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன என்று இந்தியா வின் மூலை முடுக்கெல்லாம் சென்று மாணவர்களையும், இளைஞர் களையும் எழுச்சியூட்டி வருபவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். இன்று அவரது 83-வது பிறந்த தினம்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில், படகோட்டி யின் மகனாக 1931 அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். பள்ளி நாளில் தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடுவீடாகச் சென்று காலை வேளையில் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். கல்லூரியில் சேர்வதற் கான கட்ட ணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது, தனது நகைகளை அடமானம் வைத்து அவரை கல்லூரியில் சேர்த்துவிட்டவர் அவரது சகோதரி அஸ்மா.

1958-ம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் முதன்முதலாக பணியில் சேர்ந்தபோது கலாமின் சம்பளம் ரூ.250. பின்னர் தனது கடின உழைப்பால் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் முதல் திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் திட்ட இயக்குநராக கலாம் பணியாற்றினார்.

1998 மே 11-ம் தேதி பொக்ரானில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கலாம் நடத்திய அணுகுண்டு சோதனைக்குப் பின் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா மீது திரும்பியது.

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமை யான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக் கிறார். நம் நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும் என்று இளையதலைமுறைக்கு கோரிக்கை விடுக்கும் கலாமுக்கும் நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

இதுகுறித்து ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியது:

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக் காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப் போடு நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின் றனர். பணி ஓய்வு பெற்றதும் வசதி குறைவான ஆனால் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் கலாமின் விருப்பத்துக் கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத் தில் அரசு கல்லூரி திறக்க வேண்டும். ராமேசுவரத்தில் கல்லூரி திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக் கான கலாம்கள் உருவாவர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in