சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி மென்பொறியாளர் சுவாதி படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத் தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். ராம்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ராம் குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “சுவாதி கொலைக்கும் தனது மகன் ராம்குமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக ராம்குமாரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் பல உண்மைகள் வெளிவரும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசார ணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், இந்த வழக்கில் நுங்கம்பாக்கம் உதவி ஆணையரின் புலன் விசாரணை தொடர்பான சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்து, இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை எனில் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதில் ஆட்சேபமில்லை என தெரிவித்திருந்தார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி பி.என்.பிர காஷ் பிறப்பித்த உத்தரவில், ‘‘போலீஸார் தாக்கல் செய் துள்ள அறிக்கையைப் பார்க்கும் போது நுங்கம்பாக்கம் உதவி ஆணையரின் புலன் விசார ணையில் எந்த தவறும் இருப்பதாக கருத முடியவில்லை. விசாரணை சரியான கோணத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஊடகங்களி்ல் வந் துள்ள செய்திகளை ஆதாரமாகக் கொண்டு யூகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளன. அதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நான்காவது தூணான ஊடகங்கள் தங்களுக்குள்ள சுதந் திரத்தைப் பயன்படுத்தி புலனாய்வு செய்திகள் வெளியிடுவதை தடுக்க முடியாது. சில ஊடகங்கள் தங்க ளுக்கு விதிக்கப்பட்ட லட்சுமண ரேகையை தாண்டி செய்தி வெளி யிட்டாலும், அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஊடகச் செய்திகளில் அன்னப்பறவை போல நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு கெட்டவற்றை புறம்தள்ள வேண்டும். மேலும் சுவாதியின் தந்தையிடம் போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என மனுதாரர் கூறியிருப்பதையும் ஏற்க முடியவில்லை. ஏனெனில் அவர் போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி புஷ்பம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது’’ என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in