

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் நியாயத்துக்கும், உரிமைக்கும் அனைத்து எம்.பி.க் களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் முக்கியப் பிரச் சினைகளான காவிரி, முல்லை பெரியாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதற்கும், விவசாயத் தொழிலைப் பாதுகாக்கவும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் நியாயத்துக்கும், உரிமைக்கும் குரல் கொடுத்து, அழுத்தம் கொடுத்து சுமுகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யவும், தமிழக வறட்சி மற்றும் புயல் பாதிப்புக்கு போதிய நிவாரணத் தொகை வழங்கவும், அறிவிப்புகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். முக்கியமாக ஆண்டு வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.