ஸ்ரீராமானுஜர் 1000-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பு தொடர் சொற்பொழிவு

ஸ்ரீராமானுஜர் 1000-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பு தொடர் சொற்பொழிவு
Updated on
1 min read

ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு திருநட்சத்திர பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர தொடர் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் சார்பில், கோவில் வளாகத்தில் உள்ள எம்பெருமான் இளையாழ்வார் அரங்கில் இந்த சிறப்பு வாராந்திர தொடர் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

இந்நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட முதல் நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ.உ.வே.பரஹம்ஸேத்யாதி ஸ்ரீஎம்பார் ஜீயர் சுவாமிகள் ‘உயர்வுக்கு ஒரே வழி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தினார்.

இதில் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை, அறங்காவலர் மணவாள பாஷ்யம், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரகுநாதன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று சென்னை ஆர்.லட்சுமிபிரியா, ஹரிதா நாராயணன், ஸ்ரீராம் சீனிவாசன் ஆகியோரின் கர்நாடக வாய்ப்பாட்டு வயலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in