

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதிக் குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப் பட்டு, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றிருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான அறி விக்கையை கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறி விக்கையில் பல்வேறு குளறுபடி கள் இருப் பதைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தார். டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு தனி அதிகாரி பல உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.
பாரிவேந்தர்
இந்திய ஜனநாயக கட்சி யின் நிறுவனத் தலைவர் பாரி வேந்தர் வெளியிட்ட அறிக்கை யில், “உள்ளாட்சி மன்ற தேர்தலுக் கான நடைமுறைகளை விரைவு படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அசாதாரண மான நிலைகளின்போது மட் டுமே தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி மன்றங் கள் இருக்க வேண்டும். மக்கள் ஆட்சியின் வேராக விளங்கும் இவ்வமைப்புகள், தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி களின் வழி காட்டுதலிலேயே செயல்பட வேண்டும் என்பது, கிராம ராஜ்ஜியம் குறித்து மகாத்மா காந்தியடிகளின் கருத்தாகும்.
எனவே, காலதாமதம் காட் டாமல், மக்களின் உணர்வு களை பிரதிபலிக்கும் வகை யில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித் துள்ளார்.