

தமிழகத்தில் தொடர்ந்து நான் காவது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது.
அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சில அணைகள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு சில அடிகள் மட்டும் நிரம்ப வேண்டும்.
சில அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி வருகிறது.
அணைகளில் நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.