இந்திய கப்பற்படைக்கு மீனவர்கள் தேர்வு

இந்திய கப்பற்படைக்கு மீனவர்கள் தேர்வு
Updated on
1 min read

இந்திய கப்பற்படை மற்றும் இந்திய கடலோர காவல் குழும பணிக்கு மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய கப்பற்படை மற்றும் இந்திய கடலோரப் பாதுகாப்பு படையில் ஆயிரக்கணக்கான மாலுமி பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிரப்பப்படு கின்றன. இந்திய கப்பற்படை மற்றும் இந்திய கடலோர பாது காப்புப் படையில் மாலுமி களாக சேருவதற்கு, மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த படித்த வாரிசுகளுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரவும், பல்வேறு தளங்களில் அவர்களது திறன் களை வளர்த்துக் கொள்ளவும், தமிழ்நாடு அரசு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்டமொன்றை அமல்படுத்து கின்றது.

இத்திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மீனவ இளைஞர்கள், இந்திய கப்பற் படை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படையில் சேருவ தற்கு உதவி புரிந்திடும் வகையிலும் மற்றும் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ இளைஞர்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரத்தை வழங்கிடும் வகையிலும் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கடலோர பாதுகாப்புக் குழுமம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளத் துறையின் ஒருங்கிணைப்போடு 300 மீனவ இளைஞர்களுக்கு (ஒவ்வொன் றிலும் 50 பயிற்சியாளர்களைக் கொண்ட 6 அணிகள்) இத் தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக் கப்படும் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சிக் காலத்தின்போது உணவு மற்றும் தங்குமிடம் ஆகியன வழங்கப்படுகிறது. மூன்று மாத பயிற்சி காலத்தில் மாதத்துக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்தபட்ச உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பயிற்சியை நடத்துவதற்கான தேர்வு நடைமுறைகளை கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். தமிழகத்தி லுள்ள 13 கடலோர மாவட்டங் களிலிருந்தும் விருப்பமுள்ள மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. விண்ணப்ப தாரர்களுக்கான உடற்தகுதி அளவுகோல் மற்றும் இதர விவரங்கள் சரிபார்ப்பு நடை முறைகள் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங் களில் அமைந்துள்ள 11 மையங் களில் நடைபெற்றது. மொத்தம் 310 விண்ணப்பதாரர்கள் பட்டிய லிடப்பட்டு, அவர்களில் 300 பேர் விரைவில் துவங்கப்படவுள்ள பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in