

பொது விநியோக திட்டத்துக்கு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக உணவுத்துறை அமைச் சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூரில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழகத்தில் ரேஷன் கடை களில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக் கிறது. ஆனால், ரேஷன் பொருட் கள் தட்டுப்பாடு என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க் கட்சியினர் உருவாக்கி வருகின்ற னர்.
சிறப்பு பொது விநியோக திட்டத் தின் மூலம் 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கடந்த 2-ம் தேதி டெண்டர் கோரப்பட்டு, நேற்று வரை 1000 டன் பருப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 1.50 கோடி லிட்டர் பாமாயில் வாங்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி மார்ச் 13-ம் தேதி (இன்று) திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் என்பது அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம் என்றார்.