

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரிக்கும் என தருமபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
தருமபுரி அதியமான்கோட்டை யில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்று கட்சி அலுவல கத்தை திறந்து வைத்த முன் னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதா வது:
மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கட்சி தொண்டர்கள், மக்களை குழப்பி வருகிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளதாகவும், பிரிவு இல்லை என்றும், பன்னீர்செல்வத் திடம் தான் பேசியதாகவும் நடக் காத ஒன்றை நடந்ததாக அவர் கூறி வருகிறார்.
எங்களது அணி சார்பில் ஜெய லலிதாவின் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை, கட்சியிலிருந்து சசிகலா குடும்பம் முழுமையாக வெளியேற வேண்டும் என்கிற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை குழு அமைக்கப் பட்டது. இதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், அந்த குழு கலைக்கப்பட்டதாக பன்னீர் செல்வம் அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சித் தலைமை கூறியே பாஜக வேட் பாளருக்கு ஆதரவு அளித்ததாக தம்பிதுரை கூறுவதற்கு, எம்பிக் கள் இருவர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
கட்சித் தலைமை யார் என்று அனைவருக்கும் தெரியும் என்கி றார் அவர். இது அவர்கள் நடத்தும் நாடகம். இதில் முதல்வரும் இணைந்து நாடகமாடுகிறார். கட்சி, ஆட்சி தலைமையும் சசிகலாவின் குடும்பத்தைவிட்டு விலகக்கூடாது என்பதற்காக தம்பிதுரை செயல் படுகிறார். இரு அணிகள் இணையக்கூடாது என்பதுபோல் சிலரது செயல்பாடுகள் உள்ளன.
கட்சி பெயர், சின்னம் தொடர் பாக அவர்கள் அளித்த ஆவணங் களை ஆய்வு செய்யும்போது, தொண்டர்கள் சமர்ப்பித்த ஆவ ணங்கள் எவை என தெரியவரும். உண்மையான தொண்டர்கள் உள்ள பன்னீர்செல்வம் அணிக்கே கட்சி பெயர், சின்னம் கிடைக்கும். பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளர் தேர்வு செய் யப்பட்ட பிறகு, ஒருவித நிர்பந் தம் காரணமாக காங்கிரஸ் வேட் பாளரை நிறுத்தி உள்ளது.
பேரறிவாளனுக்கு பரோல் கோரும் கோரிக்கையை எங்கள் அணி ஆதரிக்கும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.