Published : 27 Mar 2014 10:49 AM
Last Updated : 27 Mar 2014 10:49 AM

மயிலாப்பூர் லஸ் சிக்னலில் இளைஞர் வெட்டிக் கொலை: பைக்கில் வந்த 4 பேர் கும்பல் வெறிச்செயல்

சென்னை மயிலாப்பூர் பல்லக் நகரை சேர்ந்த ஜெயசீலன் - லோகேஸ்வரி ஆகியோரின் மகன் தமிழ்ச்செல்வன் (24). வீட்டருகி லேயே பெட்டிக்கடை வைத்திருந் தார். சொந்தமாக டாடா மேஜிக் ஆட்டோவும் ஓட்டினார். மயிலாப் பூர் லஸ் சிக்னல் அருகே புதன் கிழமை மாலையில் தமிழ்ச் செல்வம் நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் தமிழ்ச் செல்வத்தை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவரது தலை, முகம், கழுத்து, மார்பில் பலமான வெட்டுக்கள் விழுந்தன.

மாலையில் பரபரப்பாக இயங் கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி யடித்து ஓடினர். ரத்த வெள் ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வத் துக்கு அருகே இருந்த சில வியா பாரிகள் தண்ணீர் கொடுத்தனர். மயிலாப்பூர் காவல் துறையினர் விரைந்து வந்து தமிழ்ச்செல்வனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்ச்செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

மயிலாப்பூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள் ளன. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "தமிழ்ச்செல்வம் வசிக்கும் வீட்டின் இரு பக்கமும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இங்கு மது குடிக்க வருபவர்கள் தெருக்களில் நின்று கலாட்டா செய்யும்போதும், பெண் களை கிண்டல் செய்யும்போதும் தமிழ்ச்செல்வன் தட்டிக் கேட்டிருக் கிறார். இதில் சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் நாடான் தோட்டத்தை சேர்ந்த விமல் என்ப வருக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பல்லக் நகரை சேர்ந்த வெள் ளைக்குமார் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வனின் கடை வழியாக பள்ளிக்கு செல்லும்போது அந்த மாணவனை தமிழ்ச்செல்வன் கிண்டல் செய்ததாகவும், பேரனை கிண்டல் செய்தது குறித்து வெள் ளைக்குமாரின் தாயார் தமிழ்ச் செல்வனை கண்டிக்க, ஆத்திரம் அடைந்த தமிழ்ச்செல்வன் வெள்ளைக்குமாரின் தாயாரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழ்ச்செல்வன் புதன்கிழமை மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு செல் போன் அழைப்பு வந்தது. அதில் பேசி முடித்துவிட்டு, "என்னை நண்பர்கள் அழைக்கிறார்கள். நான் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று தாயார் லோகேஸ்வரியிடம் கூறிவிட்டு லஸ் கார்னர் சிக்னல் அருகே நடந்து சென்றிருக்கிறார். அங்கே தயாராக இருந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய் துள்ளது. எனவே, அவரது செல் போனில் அழைத்தவர் யார்? என் பதை கண்டுபிடித்து குற்றவாளி களை கண்டுபிடிக்கும் முயற்சி யில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

கொலை நடந்த லஸ் சிக்னலில் போக்குவரத்தை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்படாததால், கிடைத்திருக்க வேண்டிய பெரிய ஆதாரத்தை காவல் துறையினர் தவற விட்டுவிட்டனர். சாலை அருகே பிற கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x