பேரவைத் தலைவரை நீக்க கோரும் தீர்மானம்: சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு - துணைத் தலைவர் அவையை நடத்துவார்

பேரவைத் தலைவரை நீக்க கோரும் தீர்மானம்: சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு - துணைத் தலைவர் அவையை நடத்துவார்
Updated on
2 min read

பேரவைத் தலைவரை நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடக்கிறது. பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கெடுப்பை நடத்துகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங் கள் ஏற்பட்டன. சசிகலா தலைமையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யிலும் இரு அணிகள் உருவாகின. இந்த அணிகள் இடையே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் பலர் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்ட னர். நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத் தின் மீது வாக்கெடுப்பு நடந் தது. அப்போது, ரகசிய வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலி யுறுத்தின. ஆனால், பேரவை விதிகளில் ரகசிய வாக்கெடுப்பு முறை இல்லை என குறிப்பிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் அமளி ஏற்பட்டது. இதனால், இருமுறை அவை ஒத்தி வைக்கப் பட்டது. அதன்பின் மீண்டும் அவை கூடியபோது, திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து பகுதி வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை வெற்றி பெற்றது. எதிராக, ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட 11 பேர் வாக்களித்தனர்.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து, ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவரிடம் அளித்தார். ஆனால், விதிகளின்படி பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி, பேரவைத் தலைவரை நீக்க கோரும் தீர்மானம் தொடர்பான கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் எ.வ.வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் பேரவைத் தலைவர் மற்றும் செயலரிடம் வழங்கினர்.

இந்நிலையில், சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு, பேரவைத் தலைவர் மீதான தங்கள் கடிதம் குறித்து எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது, ‘‘இந்தக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

அதன்படி, பேரவைத் தலைவர் பி.தனபாலை பதவியில் இருந்து நீக்கக் கோரும் திமுகவின் தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதன்பின் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அதன்பின், பேரவைத் தலைவரை நீக்கக் கோரும் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது பேர வைத் தலைவர் பி.தனபால் அவையில் இருக்க மாட்டார். அவருக்கு பதில், துணைத் தலைவர் வி.பொள்ளாச்சி ஜெய ராமன் அவையை நடத்துவார்.

திமுக சார்பில் 35 எம்எல்ஏக்கள் ஒப்புதலுடன் இந்த தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்படும். தீர்மானத்தின் மீது, முதலில் திமுகவுக்கு பேச வாய்ப்பளிக்கப்படும். அதன்பின் மற்ற எதிர்க்கட்சிகள் கோரினால் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். பேசி முடித்ததும், பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். ரகசிய வாக்கெடுப் புக்கு பேரவை விதிகளில் இட மில்லை. எனவே, பெரும்பான் மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதைப்போல, குரல் அல்லது பிரிவு வாரியான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இறுதி முடிவு வெளி யிடப்படும்.

இதற்கிடையே, கடந்த மாதம் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் அளித்த புகார், அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையும் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என தலை மைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in