Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

தமிழகத்தில் விபத்துகளைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை

தமிழகத்தில் விபத்துகளைக் தடுக்க எல்லா மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்புக் குழு அமைக் கப்பட்டது. இந்தக்குழுவில், மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர்கள், ஆர்.டி.ஓக்கள், என்.ஜி.ஓ.க்கள் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மொத்த விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பீடு, இறப்பு விகிதம், மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை குறித்து இந்தக் குழு அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி, கடந்த ஆண்டுக்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத் துத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வும் மாவட்ட வாரிய சாலைப் பாதுகாப்புக்குழு அமைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்து தொடர்பான அறிக்கையை இந்தக் குழு அனுப்பும். அதன்படி,

2013-ல் நடந்த விபத்து நிலவரங் களின் அறிக்கை கேட்டு உத்தர விடப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது, அதற்கான காரணம், தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கையில் விரிவாக குறிப்பிட வேண்டும் என அறிவுறுத் தப்பட் டுள்ளது.

தமிழக அரசுக்கு வரும் அறிக்கையின் அடிப்படையில், விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தேவைப் படும் இடங்களில் பாலம் அமைத்தல், புதிய சர்வீஸ் சாலை அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல், வேகத்தடை அமைத் தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x