

உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப் படுவது வழக்கம். இதன்படி, அம் பேத்கரின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 10-வது ஆண் டாக விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத் தில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில், முன்னாள் நீதியரசர் கே.சந்துருவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’, முனைவர் வசந்திதேவிக்கு ‘பெரி யார் ஒளி’, பத்திரிகையாளர் ஞாநிக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’, மறைந்த அரசியல் தலைவர் இளையபெருமாளுக்கு ‘காமராஜர் கதிர்’, மறைந்த பாடகர் இ.எம்.அனிஃபாவுக்கு ‘காயிதேமில்லத் பிறை’, கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ‘செம் மொழி ஞாயிறு’ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருமாவள வன் பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் எனக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அப் போது, அம்பேத்கர் விருதை தலித் அல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதன்படி அடுத்த ஆண்டே நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது கொடுக்கப் பட்டது. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியே விருது வழங்குவது என்று முடிவு செய்து தலித் அல்லாதவர்களுக்கு அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி வருகிறோம்.
இந்த முறை முன்னாள் நீதியரசர் சந்துரு, முனைவர் வசந்திதேவி, ஞாநி உள்ளிட்டவர்களுக்கு கொடுத்துள்ளோம். நாங்கள் விருது கொடுத்தவர்களில் இளைய பெருமாள் மட்டும்தான் தலித். மைய நீரோட்டத்தில் இணைகிற போராட்டம்தான் இந்த விருது வழங்கும் விழா. இதைப்பற்றி குறை கூறுபவர்களைப் பற்றி நாங்கள் கவலை கொள்வதில்லை.
தமிழகத்தில் மாற்று அரசியலை நாங்கள் முன்னெடுத்தபோது, ஊக்கம் அளிக்க வேண்டிய பலர் எங்களுக்கு ஊக்கம் அளிக்க வில்லை. ஆனால், இந்த மேடையில் விருது பெற்றிருப்ப வர்கள் ஊக்கம் அளித்தனர். எங்கள் அணி மீது அபாண்டம் ஏற்படுத்தும் முயற்சியில் பாமக ஈடுபட்டது. தேமுதிக, தமாகா மக்கள் நலக் கூட்டணியின் அங்கம் கிடையாது. ம.ந.கூட்டணி தொடர்ந்து தொய் வின்றி பயணிக்கும். உள்ளாட்சித் தேர்தலையும் நாங்கள் சந்திப் போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் சந்துரு, ‘என்னுடைய வாழ்நாளில் நான் யாரிடமும் விருது பெற்றது கிடையாது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அளிக்கும் விருதை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதுடன் எனக்கு அளிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தை இருளர் சமூகத்தினருக்கு அங்கன்வாடி அமைப்பதற்காக அளிக்கிறேன். எங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த ஒருவர், ‘கூவியதற்காக விருதா’ என்று கேட்டாராம். திருமாவுக்காக நாங்கள் எவ்வளவு கூவவும் பெருமைப்படுவோம்’ என்றார்.