கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் புதிய ஏரி அமைக்கும் பணி 60% நிறைவு: ஜனவரியில் கிருஷ்ணா நீர் தேக்கிவைக்கப்படும்

கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் புதிய ஏரி அமைக்கும் பணி 60% நிறைவு: ஜனவரியில் கிருஷ்ணா நீர் தேக்கிவைக்கப்படும்
Updated on
2 min read

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி அமைக் கும் பணிகள் 60 சதவீதம் முடிந்து விட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணியை முடித்து, அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கிருஷ்ணா நதிநீரை தேக்கிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு திருவள் ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக, ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. (12 ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால், மேற்கண்ட 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடிதான் என்பதால், புதிய ஏரி கட்டுவதற்கு அரசு திட்டமிட்டது.

ஜெயலலிதா உத்தரவு

அதன்படி, திருவள்ளூர் மாவட் டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கண் ணன்கோட்டை தேர்வாய்கண் டிகை கிராமங்களுக்கு அருகே ரூ.330 கோடியில் புதிய ஏரி அமைக்க 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள 2 ஏரிகளை இணைத்து புதிய ஏரி உருவாக்கப்படுகிறது.

இதற்காக பட்டா நிலம் 800.65 ஏக்கரும், புறம்போக்கு நிலம் 629.92 ஏக்கரும், காப்புக்காடு 54.59 ஏக்கரும் ஆக மொத்தம் 1,485.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 739 நபர்களிடம் இருந்து பட்டா நிலம் கையகப்படுத்தப்பட்டு, இது வரை ரூ.90 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்த வழக்கில், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இழப்பீட்டுச் சட்டத்தின்படி இழப் பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்காததால், இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

7.15 கி.மீட்டரில் கரைகள்

இதனிடையே, நிலம் கையகப் படுத்தப்பட்ட இடத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்புதிய ஏரிக்காக 7.15 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரைகள் அமைக் கப்பட்டுள்ளன. 1.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்னும் கரைகள் அமைக்க வேண்டியுள்ளது. புதிய ஏரிக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டு வருவதற்காக தமிழக ஆந்திர எல்லையான ஜீரோ பாயிண்ட் ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி செல்லும் பாதையில், 2-வது கிலோ மீட்டரில் கிருஷ்ணா நீர் கால்வாயில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

500 மில்லியன் க.அடி கொள்ளளவு

சுமார் 36 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கனஅடி. ஆண்டுக்கு இரண்டு முறை 500 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் ஆயிரம் மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்க முடியும். மழைநீரும் தேக்கி வைக்கப்பட்டு கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள 400 ஏக்கர் நிலத்தின் பாசனத் துக்கும் தண்ணீர் வழங்கப்படும்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “புதிய ஏரி அமைக்கும் பணி 60 சத வீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை இந்த ஆண்டு இறுதிக் குள் முடித்து, அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி முதல் கிருஷ்ணா நீரைத் தேக்கிவைக்க திட்டமிடப்பட் டுள்ளது. புதிய ஏரியில் தேக்கப்படும் கிருஷ்ணா நீர், இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணா நீர் கால்வாய்க்கு குழாய் மூலம் கொண்டுபோய் விடப்படும். இதற்காக ரூ.60 கோடி யில் குழாய்கள் அமைக்கப்பட் டுள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு...

கிருஷ்ணா கால்வாயில் விடப் படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கும், பிறகு புழல் ஏரிக்கும் செல்லும். புழ லில் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் வழங்கப்படும். சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்படும் புதிய ஏரி இதுதான்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in