

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் நா.முத்துக்குமார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நா.முத்துக்குமார் மறைவு குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்து பல விருதுகளையும், இரண்டு தேசிய விருதை பெற்ற நா.முத்துக்குமார், நான் நடித்த விருதகிரி, சகாப்தம் படங்களுக்கும் பாடல்களும் எழுதியுள்ளார்.
இன்று காலை (14.08.2016) காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.