

புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி - ஆட்சியாளர்கள் உச்ச கட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரண்பேடிக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு போலீஸ் டிஜிபிக்கு அவரது செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரண்பேடிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கிரண்பேடியின் செயலாளர் தேவநீதிதாஸ், புதுச்சேரி டிஜிபி கவுதமுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
பொதுமக்கள் பிரச்சினை களை ஆய்வு செய்ய கிரண் பேடி செல்லும்போது, அசம்பா விதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாது காப்பு வேண்டும்.
அதேபோல் ஆளுநர் மாளி கையிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.