

தமிழ்ப் புத்தாண்டையொட்டி வழங்கப்படும் விருதுகளுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கபிலர் விருது, உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப், இளங்கோவடிகள், அம்மா இலக்கிய விருது, தமிழ்த்தாய் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் ‘tamilvalarchithurai.com’ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக்குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நூல் விவரத்துடன், அந்நூல்களின் ஒரு படி ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இவற்றை, தமிழ்வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 28190412, 13 ஆகியதொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.