

புதுக்கோட்டையில் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த முதல் வரை வரவேற்று அந்த மாவட்ட ஆட்சியர் பிளக்ஸ் போர்டு வைத்த தற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிளக்ஸ் போர்டுகள் அமைக்க உரிமம் வழங்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி தனியார் விளம்பர நிறுவனம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர் வில் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, பிளக்ஸ் போர்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனு மீது இறுதி முடிவு வரும் வரை பிளக்ஸ் போர்டுகள் மனு மீது முடிவெடுக்க முடியாது என விருதுநகர் ஆட்சி யர் தெரிவித்துள்ளார். அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அரசு வழக்கறிஞரின் விளக்கம்
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் வைக்கும் பிளக்ஸ் போர்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கள் கேட்டனர். அதற்கு அரசு வழக்கறிஞர், அரசின் நலத்திட்டங் கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக் கத்தில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், நாங்கள் அதுபோன்ற போர்டு கள் பற்றி கேட்கவில்லை. மருத் துவக் கல்லூரி திறப்பு விழாவுக்காக புதுக்கோட்டைக்கு முதல்வர் வந்தபோது அவரை வரவேற்று வருக, வருக என மாவட்ட ஆட்சியர் வைத்த போர்டு குறித்து கேட்கிறோம் என்றனர்.
நீதிபதிகள் கேள்வி
ஆட்சியர்கள் இதுபோன்ற பிளக்ஸ் போர்டுகள் வைக்க லாமா?, ஆட்சியர்கள் இதுபோல் செயல்படலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதல்வரை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பிளக்ஸ் போர்டு வைத் தது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்ப தாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு அரசு வழக்கறிஞர் எந்த பதிலும் அளிக்கவில்லை. பிறகு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து ஒரு மாதத்தில் விருதுநகர் ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.