

கனிம குவாரி முறைகேட்டில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: கனிம குவாரி முறைகேடு கள் குறித்து சகாயம் தலைமையி லான குழு விசாரணை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. இதில் தவறு செய்தவர் கள் யாராக இருந்தாலும் தண்டிக் கப்பட வேண்டும். நீதிமன்றம் அதற்கான குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதைச் செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாதிக் கப்பட்ட மக்களுக்கும் விவசாயி களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். மழைநீரை வீணாக்காமல் சேமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-ல் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகத் திருவிழாவுக்காக மத்திய அரசு சார்பில் நிரந்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில்வே பணிகளை செயல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசித்து விரைந்து செயல்படுத்தப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.