விடுதலையான 77 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

விடுதலையான 77 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
Updated on
1 min read

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி விடுதலை செய்தது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 38 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர் கள் என மொத்தம் 77 பேரையும் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை யினர் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை காரைக்காலில் உள்ள தனியார் கப்பல் துறைமுகத்துக்கு இந்திய கடலோர காவல் படை யினர் நேற்று மாலை அழைத்து வந்தனர்.

அமைச்சர்கள் வரவேற்பு

தமிழக அமைச்சர்கள் ஜெயக் குமார், ஓ.எஸ்.மணியன், நாகை ஆட்சியர் சு.பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் மீனவர் களை வரவேற்று உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட் களை வழங்கி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in