

அறுவை சிகிச்சைக்குப் பின் வலி நிவாரணியாக பயன்படும் டைக்ளோஃபினாக் (Diclofenac) மருந்தை மொத்தமாக மல்டி பேக்கில் வைத்து விற்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் வலி நிவாரணி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு டைக்ளோஃபினாக் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை அலர்ஜி, வாதம், ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, இதய நோய் உள்ளவர்கள், கர்ப் பிணிகள், தாய்ப்பால் கொடுப்ப வர்கள் பயன்படுத்தக் கூடாது. கால்நடைகளுக்குக்கூட இந்த மருந்தை கூடுதலாக கொடுப் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளது. தற்போது இந்த மருந்து 1 மி.லி., 3 மி.லி. மற்றும் 30 மி.லி. பேக்குகளில் விற்கப்படுகிறது.
ஆனால் 30 மி.லி. அளவு உள்ள இந்த மருந்தை மொத்தமாக மல்டி பேக்கில் வைத்து விற்பனை செய்ய தடை விதித்துள்ள மத்திய சுகா தாரத் துறை அமைச்சகம், மனித பயன்பாட்டுக்கு 3 மி.லி. அளவுக்கு மட்டுமே பயன்படுத்த கடந்த 2015 ஜூலை 17-ல் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சென் னையைச் சேர்ந்த தனியார் மருந்து கம்பெனி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. அதில் ''எங்களது நிறுவ னம் சார்பில் டைக்ளோஃபினாக் மருந்தை 3 மி.லி. மற்றும் 30 மி.லி. அளவில் விற்பனை செய்து வருகிறோம். 30 மி.லி. பேக்கினை பெரிய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் பதிவு பெற்ற டாக்டர்களுக்கு மட்டுமே சப்ளை செய்து வருகிறோம்.
கடந்த 2013 மே 16-ல் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் (டிடிஏபி) இதுதொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து ஆராய்ந்து முடிவு எடுக் கலாம் என முதலில் தீர்மானித்தது. அதன்பிறகு 2 மாத இடைவெளியில் 2013 ஜூலை 19-ம் தேதி திடீரென இந்த மருந்தை மல்டி பேக்கில் வைத்து விற்க தடை விதித்துள் ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது துணை மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆர்.சந்திரசேகர், எஸ்.மணிவண் ணன் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, இன்னும் இது தொடர் பாக ஆராய குழு அமைக்கப் படவில்லை என்றனர்.
அப்போது நீதிபதிகள், ''டைக் ளோஃபினாக் மருந்தின் உபயோ கத்தை அறிந்து அதை மல்டி பேக்கில் விற்கலாமா, வேண்டாமா? என்பதை அறிய 2 ஆண்டுகளுக்கு முன்பே 3 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைக்க இருப்பதாகக் கூறி அவர்களின் பெயர்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வரை அந்தக் குழு அமைக்கப் படவில்லை. எனவே அந்த நிபுணர் குழுவை உடனடியாக அமைத்து இந்த மருந்தை மொத்தமாக மல்டி பேக்கில் வைத்து விற்பனை செய் தால் தீங்கு ஏற்படுமா? என்பது குறித்து ஆராய்ந்து அதன் அறிக் கையை மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமத்துக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தர விட்டு, விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.