Published : 25 Aug 2016 09:47 AM
Last Updated : 25 Aug 2016 09:47 AM

சென்னை, மாமல்லபுரம், தஞ்சையில் வார கடைசி நாட்களில் பாரம்பரிய, கிராமிய கலை நிகழ்ச்சிகள்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

சென்னை கலைவாணர் அரங்கம், மாமல்லபுரம் மரகத பூங்கா, தஞ்சை சரஸ்வதி மகால் ஆகிய இடங்களில் வார இறுதி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நிலவும் அமைதி யான சூழல், கலை, எளி தான அரசு அணுகுமுறை ஆகியவற்றால் ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ல் தமிழகத்துக்கு 32.75 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் 46.57 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். 2015-ல் 33.34 கோடி உள்நாட்டு பயணிகள், 46.84 லட்சம் வெளிநாட்டு பயணிகள் தமிழகம் வந்தனர். இந்த 2 ஆண்டுகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது.

தொடர் பயிற்சி

மத்திய, மாநில அரசு நிதி மூலம் சுற்றுலாத் தலங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத் தப்படுவதுடன், சுற்றுலாத் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவை வழங்க சுற்றுலாத்துறை அலுவலர் களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தொடர் பயிற்சி வழங்கப்படும்.

ஊட்டி, முதலியார்குப்பத்தில் உள்ள படகுக் குழாம்களில் மிதவை உணவகங்கள் ரூ.70 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 20 ஹோட்டல்களிலும் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் ரூ.4 கோடியில் நிறுவப்படும்.

சென்னையில் கூவம் ஆற்றின் இருபுறமும் தீவுத் திடல் அமைந்துள்ளது. இங்கு நடத்தப்படும் அரசு பொருட் காட்சியின்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்காலிக மரப்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக ஏற்படும் தொடர் செலவினத்துக்கு நிரந்தர தீர்வாக, இரும்பு உருக்கு கள் மூலம் வலுவான பாலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும்.

சென்னை கலைவாணர் அரங்கம், மாமல்லபுரம் மரகதப் பூங்கா, தஞ்சை சரஸ்வதி மகால் ஆகிய இடங்களில் வார இறுதி நாட்களில் கலை, பண்பாட்டுத்துறை, தென்னக பண்பாட்டு மையங்களின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் பல்வேறு கிராமிய, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தல அருங்காட்சியகம்

மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் நடக்கும் முக்கிய விழாக் களின்போது, சுற்றுலாத்துறை மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். காஞ்சிபுரம், மாமல்ல புரத்தில் சுற்றுலா தகவல் மையம், தல அருங்காட்சியகம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும். பண்பாடு, வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் பற்றிய பண்பாட்டு வரைபடவலை (கல்சுரல் அட்லாஸ்) ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x