Published : 05 Dec 2016 02:20 AM
Last Updated : 05 Dec 2016 02:20 AM

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற தலைவர்கள் விழைவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பூரண நலம் பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி:

"தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்பதைக் கேள்விப்பட்டது கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

திமுக தலைவர் கருணாநிதி (ட்விட்டரில்):

"தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன்"

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:

"முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்."

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

"லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைவார்."

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

"தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற முதல்வர் ஜெயலலிதா விரைந்து நலம் பெற வேண்டும். லட்சக்கணக்கான தொண்டர்களின் பிரார்த்தனையின் விளைவாக, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கூடிய வகையில் அவர் நலம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்."

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்பவேண்டும்."

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று பணிக்குத் திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்."

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி:

"தமிழக முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்."

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் எனது மற்ற நண்பர்களைப் போல நானும் அவர் சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறேன். இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்."

கர்நாடக முதல்வர் சித்தராமையா:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டுகிறேன்."

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x